இடுகைகள்

எனது ப்ளாக்

எனது ப்ளாக் இல் பொதுவான பொது அறிவு தொடர்புடைய தகவல்கள் பதிவிடப்படும். படித்து பயன்பெறுக

மிருகங்களின் கண்கள் இரவில் எப்படி ஒளிர்கின்றன?

மிருகங்கள் போல மனிதனுக்கு ஏன் இருட்டில் கண்கள் தெரிவதில்லை? விலங்குகளின் கண்கள் மட்டும் இருளில் ஒளிர்வதற்கான காரணம் அவற்றின் கண்களின் இடைப்பகுதியில் உள்ள உருண்டையான கருமை நிற துளையான டாபிடியம் லூசியம் என்பதற்கு முன் உள்ள ஒரு எதிரொளிக்கும் அடுக்கு போன்ற அமைப்பு. இதை ஆங்கிலத்தில் Layer என்றும் கூறலாம். இது கண்களுக்குள் உள்ள பார்வை தரும் ரெட்டினா என்ற அமைப்புக்கு பின்புறம் அமைந்திருக்கும். இந்த அமைப்பானது எந்த அளவுக்கு எதிரிலிருந்து ஒளியை உள்வாங்குகிறதோ அந்த அளவுக்கு ஒளியை எதிரொளிக்கும். இந்த டாபிடியம் லூசியம் என்ற துளை போன்ற அமைப்பு உள்ளதால் தான் விலங்குகளின் கண்கள் இரவு ஒளியில் மிளிர்கின்றன. மனித கண்களில் இது இல்லாததால் நமது கண்கள் இரவில் மின்னுவதில்லை.